உங்களுக்குத் தெரியுமா?
தமிழின் "க' என்ற எழுத்து வரி மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேக...ம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).
அதே போல 'த' எனும் எழுத்து வரிசை மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார். கார்மேகமானது கொட்டும் மழையைப் போல பாடலைக் கொட்டுகின்றார் காளமேகம்.
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?) என்னே அழகிய விதத்தில் பாடியுள்ளார்?!See more
உங்களுக்குத் தெரியுமா? இவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.
ஞாயிறு, 1 ஜனவரி, 2012
வெள்ளி, 23 டிசம்பர், 2011
நாதஸ்வர ஓசை
ஓவியம் அது சொல்லும் பல ஆயிரம் கவிதை
காவியம் அது சொல்லும் பல ஆயிரம் விதை
மஹா காவியம் அதனுடன் இணைந்த நாதம்
அந்த விந்தை வித்தை இந்த நாத ஸ்வர ஓசை
தேவனும் ரசிக்கும் நாதஸ்வர ஓசை
இந்த மகாதேவன் கிரிதரனின் பெயர் இணைத்திடும்
நப்பாசை .........
வண்ணநிலவனின் எழுத்துக்கள்.
வண்ணநிலவன் ..முதன்முதலாக பாரத ஸ்டேட் பேங்க் திருநெல்வேலி கிளை எழுத்தர் .. என் இனிய நண்பர் ...கிரிதரன் மகாதேவன் என்பதில் நான் பெருமகிழ்சி கொள்கிறேன்
| வண்ணதாசன் & வண்ணநிலவன் - சாரல் இலக்கிய விருது 2012 | ||
|
லேபிள்கள்:
கிரிதரன் mahadevan,
சபி,
புலரிகல்யன்ஜி,
வண்ணநிலவன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)