சனி, 19 ஜனவரி, 2013

பொம்மை வானம்!


11) பொம்மை வானம்!




*
மந்தையை விட்டு
வெகுதூரம்
விலக்கி வைப்பதுதான் இது,
இந்த மேய்ப்பனை மன்னியும்
என் சிதறிய ஆட்டுக்குட்டியே!


*

திமிரத் திமிரக்
கை மாற்றுகிறேன்
பட்டாம்பூச்சி உன்னை,
வண்னங்கள்
என் விரல்களில் பாதி;
அவர்கள் விரல்களில் மீதி!



*

வரவேற்பறை,
படுக்கையறை,
சிலபோது சமையலறை,
அறையறையாய்
இவனை ஏற்றிக் கொண்டு
உருண்ட ரயில்தான்
இந்த அறைதாண்டி
வராந்தாவை அணுகக் கூடாமல்
விக்கித்து நிற்பது!



*

கிளி பொம்மை இறந்ததை
நினைவு கூர்கிறாய்,
பேருக்குக் கூட
பொம்மை வானமொன்று
இருந்திருக்காது,
சரிதானே பையா!


-ப.தியாகு,
கோவை.
8012330511

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக